சிதம்பரத்தில் கிணறு தூர்வாரும் போது விஷவாயு தாக்கி இருவர் சாவு
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் ஹாஜாமைதீன் என்பவருக்கு சொந்தமான தாஜ்பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தின் பின்புறம் உள்ள சுமார் 75 அடி ஆழமுள்ள கிணற்றை தூர் வாருவதற்காக


சிதம்பரம் நகரில் கிணறு தூர்வாரும் போது விஷவாயு தாக்கி இருவர் இறந்தனர்.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் ஹாஜாமைதீன் என்பவருக்கு சொந்தமான தாஜ்பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தின் பின்புறம் உள்ள சுமார் 75 அடி ஆழமுள்ள கிணற்றை தூர் வாருவதற்காக உரிமையாளர் ஹாஜாமைதீன்,சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்த சின்னதம்பி (46), இவரது மருமகன் வெற்றிகுரு (28) ஆகிய இருவரை அழைத்து வந்து பணியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கிணறு தூர்வாரிக் கொண்டிருக்கும் போது இன்று பிற்பகல் விஷவாயு தாக்கி கிணற்றிலேயே இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் கட்டட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். நிலைய அலுவலர் ஜஹாங்கீர்முகமது தலைமையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று சுமார் 30 நிமிடங்கள் போராடி கிணற்றில் விஷவாயு தாக்கி இறந்த இருவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இறந்த போன சின்னதம்பிக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மற்றொருவரான சின்னதம்பியின் மருமகன் வெற்றிகுருவிற்கு ரம்யா என்ற மனைவியும் இருமகள்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...