திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 50 பேர் காயம்
திருவாரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.


திருவாரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து வெள்ளிக்கிழமை காலை திருத்துறைப்பூண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் இருந்த குளத்தில் விழுந்தது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
ஓட்டுநர் பாலு இந்தப் பேருந்தை ஓட்டி வந்தார். இந்த விபத்தில் 15 மாணவிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் சாந்தி என்பவருக்கும் கர்ப்பிணியான சுமதி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமச்னையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் நடராஜன், தாசில்தார் ராஜகோபால், டிஎஸ்பி அப்பாசாமி, எம்எல்ஏ உலகநாதன் ஆகியோர் பார்வையிட்டு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
குளத்தில் மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...