அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எடை குறைவு உள்ளவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா உள்ளது: அகில இந்திய விவசாய சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை

அகில இந்திய விவசாயிகள் சங்க 33வது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோ.மாதவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்

News image
Updated On :29 ஜூன் 2013, 2:01 pm

G.Sundararaj

எடை குறைவு உள்ளவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா 128-வது இடத்தில் உள்ளது என அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை தெரிவித்தார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க 33வது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோ.மாதவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார்.கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமச்சந்திரபிள்ளை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 45 ஆண்டுக்கு பிறகு கடலூரில் ஜூலை 24-27ல் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு நடைபெறுகிறது. அதிலும் விவசாயிகள் என்னற்ற போராட்டத்தால் வெற்றி பெற்ற கடலூரில் நடப்பது தான் முக்கியமானது. இம்மாநாட்டில் விவசாயிகளின் குறைகளை விவாதித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். நாட்டில் பசி, பட்டினி வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 218 குழந்தைகள் சத்து குறைவாக பிறக்கிறது. ஒரு பக்கம் பசி பட்டினி, வறுமை என விவசாயிகள் தற்கொலைகள் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கெல்லாம் என மத்திய அரசின் தவறான கொள்கை தான் காரணம். விவசாயிகளின் உற்பத்தி உயர்ந்தால் தான் கிராமங்களை சீர்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருத்தில் கொண்டு விவசாயிகளின் உற்பத்தி மகசூலை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை தெரிவிதக்தார்.

தமிழக விவசாயிகள் சங்க தலைவரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கம் 80 ஆண்டு கால வரலாற்றை கொண்டது. உலகிலேயே 2 கோடி உறுப்பினர்களை கொண்ட அமைப்பு அகில இந்திய விவசாயிகள் சங்க அமைப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அடிதட்டு மக்களின் போராட்டம், மாற்றுக் கொள்கை வைத்து போராடும் அமைப்பு தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம். இச்சங்கம் பல்வேறு வரலாற்று தியாகங்களை செய்துள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநாட்டு நிதிக்காக சிதம்பரம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, விருத்தாசலம், புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிட்ம் வசூலிக்கப்பட்ட பணத்தை அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவரிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா,  மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.வாலண்டினா, சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம், விருத்தாசலம் வட்டச் செயலாளர் கந்தசாமி, குமராட்சி ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், காட்டுமன்னார்குடி வட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டக்குழு உறுப்பினர் சி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.