கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் கண்டனம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:34 am

அரவிந்தன்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.கடந்த பிப்ரவரி 16-ம் தேதிதான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50, டீசல் விலை 50 காசுகளும் உயர்த்தப்பட்டன. அடுத்த 12 நாள்களிலேயே மீண்டும் விலை உயர்த்தியிருப்பது எந்த நீதிக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துள்ள மனிதநேயமற்ற பொருளாதார குற்றமாகும்.

2009 ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 44.24 ஆக இருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் 113.86 டாலரிலிருந்து 109.74 டாலராக குறைந்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய்யின் விலை 128 டாலரிலிருந்து 131 டாலராக உயர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்துக்காக பொய்யான புள்ளி விவரங்களை அளிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசுத் திரும்பப் பெறவேண்டும்.

மேலும் பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வதுடன், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.