டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்

கும்மிடிப்பூண்டியில் நேற்று(சனிக்கிழமை) இரவு அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக பல்வேறு பகுதியில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் வந்தனர். இந்நிலையில் பெரியஓபுளாபுரம் காலனியில் இருந்து கிளைச் செயலாளர் எபினேசர் தலைமையில் சுமார் 35 தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கூட்டம்

News image
Updated On :3 மார்ச் 2013, 9:23 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டியில்  நேற்று(சனிக்கிழமை) இரவு நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்களை ஏற்றி சென்று திரும்பிய வேன் பெரிய ஓபுளாபுரம் பகுதியில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் உட்பட 21 அ.தி.மு.க-வினர் காயமடைந்தனர்.

கும்மிடிப்பூண்டியில் நேற்று(சனிக்கிழமை) இரவு அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக பல்வேறு பகுதியில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் வந்தனர். இந்நிலையில் பெரியஓபுளாபுரம் காலனியில் இருந்து கிளைச் செயலாளர் எபினேசர் தலைமையில் சுமார் 35 தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கூட்டம் முடிந்ததும் ஒரு வேனில் வீடு திரும்பினர்.அந்த வேனை துராப்பள்ளம் பஜார் பகுதியை சேர்ந்த சேகர் மகன் விஜயன்(24) என்பவர் ஓட்டியுள்ளார். வேன் பெரியஓபுளாபுரம் கிராமத்திற்குள் நுழைந்த போது ஒரு வளைவில் அதிவேகம் காரணமாக நிலை தடுமாறி கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்து அதிலிருந்த பெண்கள் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்டனர்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, அவை தலைவர் ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் முத்துகுமரன் உட்பட பலர் வேன் கவிழ்ந்ததில் காயமடைந்த 21 பேரை வேறொரு வாகனத்தில் ஏற்றி முதலுதவிக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கிளை செயலாளர் எபினேசர்(33), ரம்யா(24), பவானி(35), அன்னம்மாள்(60), லட்சுமி(50), கல்யாணி(45), தனலட்சுமி(60), யசோதா(55), துளசி(50), உஷா(35), கற்பகம்(36), லைலா(40), கல்யாணி(56), நாகம்மாள்(65), கெளரி(50), ஏசம்மா(50) ஆகியோர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

கையில் எலும்பு முறிவுக்குள்ளான சந்தோஷம்(35), படுகாயமடைந்த ஜோதி(50), ருக்மணி(35),மல்லிகா(35),மாரியம்மாள்(60) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.