விருதுநகரில் கடத்தல் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு கையொழுத்திடுவதற்காக வந்தவர்கள் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் கார் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதமடைந்தது.
விருதுநகர் மேலரத தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.நாகராஜன்(50), இவரது மனைவியும், நகராட்சி உறுப்பினருமான தங்கப்பாண்டியம்மாள்(45). இருவரும் கடந்த ஆண்டு 29.8.2012 அன்று இரவு கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் தேசபந்து மைதானம் அருகே வரும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு தெருவைச் சேர்ந்த ஐயப்பன்(45) மற்றும் உறவினர்களான சிவா, சிவி சக்கரவர்த்தி, ரவி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக இளைஞர் அணிச் செயலாளர் மதிவாணன் என்பவரை கடத்தி ஆயுதத்தால் மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த போது வாகனத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இது தொடர்பாக மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நாள்தோறும் மேற்கு காவல் நிலையத்தில் கையொழுத்துப் போடவேண்டும்.அதன் அடிப்படையில் இன்று காவல் நிலையத்தில் கையொழுத்திடுவதற்காக கச்சேரி சாலையில் கிறிஸ்துவ ஆலயம் எதிரே குறிப்பிட்டவர்கள் நானோ காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பியோடினார்கள். இதில், வாகனத்தின் முன்புறமும், கண்ணாடியும் சேதமடைந்தது. இதில், ஐயப்பன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இது குறித்து ஐயப்பன் மேற்கு காவல் நிலையத்தில் எஸ்.நாகராஜன் உறவினர்களான விக்ரமன்,மகேஷ், அமிர்தசங்கர், அப்பு, கணேசன், கார்ல்மார்க்ஸ், நயினார் முருகன் உள்பட 9 பேர் மீது புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறாகள். இது பொதுமக்கள் பலர் நாடமாட்டம் உள்ள பகுதியில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். இதனால், அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

