விருதுநகரில் கச்சேரி சாலையில் கிறிஸ்துவ ஆலயம் முன்புறம் காவல் நிலையத்திற்கு கையொழுத்திட வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மேற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஐயப்பன், அவரது உறவினர்களான சிவா, சிபி சக்கரவர்த்தி ஆகிய 3 பேரும் திமுக இளைஞரணி நிர்வாகியாக இருந்த மதிவாணன் என்பவரை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இந்திரா நகர் அருகில் திடீரென காரில் கடத்தினார்கள். அதையடுத்து, அவரிடம் பணம் கேட்டு ஆயுதத்தால் மிரட்டிய நிலையில் தப்பியோடினார். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக நாள்தோறும் காவல் நிலையத்தில் கையொழுத்திட வேண்டும். அதற்காக வியாழக்கிழமை வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென சுமோ காரில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோடினார்கள். இதில், வாகனம் மட்டும் சேதமடைந்த நிலையில் அதிஷ்டவசமாக ஐயப்பன் உள்ளிட்ட 3 பேரும் உயிர் தப்பினார்கள்.
இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஐயப்பன், கடந்த 29.10.2012 அன்று தேசபந்து மைதானத்தி்ல வெட்டிக் கொலை செய்யப்பட்ட எஸ்.ஆர்.நாகராஜன்-தங்கப்பாண்டியம்மாள் ஆகியோரின் உறவினர்கள் 9 பேர் மீது புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூன்று தனிப்படை பிரிவு அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய மகேஸ்வரன், அப்புராஜ், கணேசன், நயினார் முருகன் உள்ளிட்ட 4 பேர் சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

