இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல, கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார்.
மேலும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், அதுவும் குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது, இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


