சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டில் விடியல் விழா! அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று தொடங்கி வைத்தார்

விடியல்விழாவை முன்னிட்டு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள நெய்தல் அரங்கில் பிச்சாவரம் சுரபுண்ணை காடுகள் குறித்து

News image
Updated On :17 மார்ச் 2013, 4:29 am

கடலூர் மாவட்டத்தில் பொழுது போக்கு அம்சம் மிகவும் குறைவு. சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலா ஸ்தலமாக மேம்படுத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் விடியல் விழா (DAN FEST- 2013) சனிக்கிழமை மாலை தொடங்கியது. விடியல்விழாவை முன்னிட்டு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள நெய்தல் அரங்கில் பிச்சாவரம் சுரபுண்ணை காடுகள் குறித்து குறும்படம் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.  பின்னர் படகுகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையோரம் உள்ள எம்ஜிஆர் திட்டு தீவுக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற விடியல் விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்தியாதித்தன் முன்னிலை வகித்தார். உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்துப் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சி.ராஜேந்திரன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), செல்விராமஜெயம் (புவனகிரி),  உதவிஆட்சியர்கள் எல்.சுப்பிரமணியன் (சிதம்பரம்), லலிதா (கடலூர்), வட்டாட்சியர் க.தனசிங்,  மக்கள்-தொடர்பு அதிகாரி கு,.தமிழ்ச்செல்வராஜன், உதவி மக்கள்-தொடர்பு அதிகாரி நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் தஞ்சை கலாச்சார மையத்தைச் சேர்ந்த நாட்டுபுறக்கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம், மயிலாட்டம், ஓயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுபுறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சிகள் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விடியல்விழா 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் க.தனசிங், கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்தியாதித்தன், சுற்றுலா அலுவலர் உதயகுமார், மக்கள்-தொடர்பு அதிகாரி கு.செந்தமிழ்ச்செல்வராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விடியல் விழாவை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையினரின் ரம்மியமான இசையுடன் சூரியஉதய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பல்கலைக்கழக யோகா மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கடாஜலபதி தலைமையில் மாணவர்கள் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இசை மற்றும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.