விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக நடத்தப்பட உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 29-ம் தேதி தொடங்கி நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தி்ல, விருதுநகர்-அருப்புக்கோட்டை என இரண்டு மாவட்டங்களாக பிரித்து 2 சரக துணைப்பதிவாளர்கள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் கூட்டுறவு இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் 270 கூட்டுறவு சங்கங்களும், பால்வளத்திற்கு 313 சங்கங்களும், கைத்தறி துறைக்கு 64 சங்கங்களும், காதி துறைக்கு 17 சங்கங்களும், தொழில் வணிகத்துறைக்கு 4 சங்கங்களும், வேளாண் பொறியியல் கூட்டுறவு துறைக்கு 5 சங்கங்களும், மீன்வளத்துறைக்கு 5 சங்கங்களும், வீட்டு வசதி துறைக்கு 26 சங்கங்களும், பட்டு வளச்சித்துறைக்கு 3 சங்கங்களும், என மொத்தம் 713 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்களுக்கு வருகிற ஏப்.4, 12, 19 மற்றும் 27 ஆகிய நாள்களில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில், முதல் கட்டமாக வருகிற 5-ம் தேதி நடைபெற இருக்கிற கூட்டுறவு சங்கத்தின் தேர்தலுக்கான மனுத்தாக்கல், இம்மாதம் 29-ம் தேதி தொடங்குகிறது. அதேபோல், 12-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு ஏப்.4-ம் தேதியும், 19-ம் தேதி நடைபெற இருக்கிற தேர்தலுக்கு ஏப்.9ம் தேதியும், 27-ம் தேதி நடைபெற இருக்கிற தேர்தலுக்கு ஏப்.15-ம் தேதியும் மனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது.
இப்பணிகளில் மொத்தம் 713 பணியாளர்கள் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளருடன் இணைந்து அனைத்து துறை சங்கங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். முதல் கட்டமாக 188 சங்கங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 178 சங்கங்களுக்கும், மூன்றாம் கட்டமாக 174 சங்கங்களுக்கும், நான்கவது கட்டமாக 173 சங்கங்களுக்கும் என குறிப்பிட்ட நாள்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளாக 151 சாவடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸார் பாதுகாப்பு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இத்தேர்தலுக்காக 326 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கிறது.
மேலும், இத்தேர்தலில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு விதிமுறைகள் குறித்த கையேடுகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித தவறும் நடக்காத வகையில் கையேடுகளை முழுமையாக படித்து பார்த்து அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குப் பெட்டிகள் கையாளுதல், தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்தல் தொடர்பான சந்தேகம் இருந்தால் அந்தந்த மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

