ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி  சாவு

நம்பியூர் அருகே உள்ள சின்னகோசனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் நம்பியூர் இருகாலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் உறவினர்களை பார்த்துவிட்டு வீடு திரும்பினார். நம்பியூர் தனியார் கியாஸ் கம்பெனி அருகில் வந்தபோது

Updated On :5 மே 2013, 3:30 pm IST

நம்பியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

நம்பியூர் அருகே உள்ள சின்னகோசனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் நம்பியூர் இருகாலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் உறவினர்களை பார்த்துவிட்டு வீடு திரும்பினார். நம்பியூர் தனியார் கியாஸ் கம்பெனி அருகில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழந்தார்.

இதையடுத்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கருக்கம்பாளையம் புதூரை சேர்ந்த பிததீப்(25) என்பவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து தொடர்பாக நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.