தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகம்- காங்கிரஸுக்கு 110 இடங்கள்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றிபெறும் என்று காப்ஸ் நிறுவனம் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :5 மே 2013, 5:56 pm

கவியழகன்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றிபெறும் என்று காப்ஸ் நிறுவனம் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த கிரியேட்டிவ் சென்டர் ஃபார் பொலிடிகல் ஸ்டடீஸ்(காப்ஸ்)என்ற ஆய்வு நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு நடத்தியுள்ளது. வாக்காளர்கள் வாக்களித்த பிறகு, அவர்களிடம் திரட்டிய தகவல்களின்படி காங்கிரஸ் கட்சிக்கு 110, பாஜகவுக்கு 47, மஜதவுக்கு 32, கஜகவுக்கு 23, இதரக்கட்சிகளுக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்நேகா கூறியது: 224 சட்டப்பேரவை தொகுதிகளில், தொகுதிக்கு தலா 40 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 8960 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு நடத்தினோம். வாக்குச்சாவடிக்கு தலா 100 வாக்காளர்கள் வீதம் மொத்தம் 8.96 லட்சம் வாக்காளர்களிடம் கருத்தறிந்தோம். இதில் தொகுதிக்கு 12 ஊழியர்கள் வீதம் 2688 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

224 தொகுதிகளில் காங்கிரசுக்கு 110, பாஜகவுக்கு 47, மஜதவுக்கு 32, கஜகவுக்கு 23, இதரக்கட்சிகளுக்கு 11 இடங்கள் கிடைக்கும். பழைய மைசூர் பகுதியில் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரசுக்கு 38, பாஜகவுக்கு 13, மஜதவுக்கு 13, இதரக்கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும். மத்திய கர்நாடகம் பகுதியில் உள்ள 25 தொகுதிகளில் காங்கிரசுக்கு 13, பாஜகவுக்கு 4, மஜதவுக்கு 3, கஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்கும். மலைநாடு கர்நாடக பகுதியில் உள்ள 25 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9, பாஜகவுக்கு 3, இதரக்கட்சிகளுக்கு 1 இடம் கிடைக்கும். கடலோரகர்நாடக பகுதியில் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9, பாஜகவுக்கு 3, இதரக்கட்சிகளுக்கு 1 இடம் கிடைக்கும். குடகில் உள்ள 2 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். மும்பை கர்நாடக பகுதியில் உள்ள 50 தொகுதிகளில் காங்கிரசுக்கு 26, பாஜகவுக்கு 14, மஜதவுக்கு 2, கஜகவுக்கு 5, இதரக்கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். ஹைதரபாத்-கர்நாடக பகுதியில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 15, பாஜகவுக்கு 7, மஜதவுக்கு 6, கஜகவுக்கு 9, இதரக்கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். இதுவரை நாங்கள் நடத்தியுள்ள கணிப்புகளில் 95 சதவிகிதம் சரியாக இருந்துள்ளது என்றார்.

டிவி9 தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பில் காங்கிரசுக்கு 110-118, பாஜகவுக்கு 51-59, மஜதவுக்கு 31-37, கஜகவுக்கு 9-13, இதரக்கட்சிகளுக்கு 7-11 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பில் காங்கிரசுக்கு 100-116, பாஜகவுக்கு 43-53, மஜதவுக்கு 43-53, இதரக்கட்சிகளுக்கு 16-24 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. டைம்ஸ் நௌ தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பில் காங்கிரசுக்கு 114, பாஜகவுக்கு 55, மஜதவுக்கு 34, கஜகவுக்கு 11, இதரக்கட்சிகளுக்கு 9 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஏபிசி-ஆஜ்தக் தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பில் காங்கிரசுக்கு 110-118, பாஜகவுக்கு 51-59, மஜதவுக்கு 31-37, கஜகவுக்கு 9-13, இதரக்கட்சிகளுக்கு 7-11 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.