தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆற்றில் கார் கவிழந்து ஓட்டுநர் சாவு: 5 பேர் காயம்

திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். இரு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.

Updated On :12 மே 2013, 2:24 pm IST

திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். இரு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஜோசப் (33). இவரது அம்மா ஜெபமாலைமேரி (58). ஜோசப் மனைவி குழந்தைத்தெரசா (29). குழந்தைகள் பிரான்சினா (5), ஜோனா (ஏழு மாத பெண் குழந்தை). குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக இவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்தனர். கார் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிளரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து வெட்டாற் றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுனர் பெங்களூரைச் சேர்ந்த தொப்ளான் மகன் சுப்பிரமணியன் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ஜோசப், குழந்தைத்தெரசா உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.