பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் நல்லாட்சியை நடத்த வேண்டும்: ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

Updated On :12 மே 2013, 9:38 pm IST

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று அரசு அமையவுள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு வழங்க வேண்டும். மக்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி புதிய திட்டங்களை வகுத்து செயலாற்ற வேண்டும். சித்தராமையா தலைமையில் திங்கள்கிழமை புதிய அரசு அமையவுள்ளது. நல்லாட்சி நடத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து சித்தராமையா சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.