யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

10 ஆண்டுகளில் 1 கோடி செவிலியர் பணி அமர்த்தப்படுவார்கள்

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி(என்.எஸ்.டி.சி), அடுத்தப் பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது. தகுதியான செவிலியர்களுக்கு இருக்கும் தேவையானது, மருத்துவர்களுக்கு

News image
Updated On :12 மே 2013, 8:27 am

கோ.ஜெயக்குமார்

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி(என்.எஸ்.டி.சி), அடுத்தப் பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது. தகுதியான செவிலியர்களுக்கு இருக்கும் தேவையானது, மருத்துவர்களுக்கு இருக்கும் தேவையைவிட அதிகமாக உள்ளது என்று கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் கூறினார்.

கல்லூரியில் உலக செவிலியர் தினத்திற்கு இன்று தலைமையேற்று பேசுகையில் டாக்டர் வி.பி.எம்.சங்கர் கூறியதாவது:

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.இதன்படி உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மருத்துவத் தொழிலை எடுத்துக்கொண்டால், அதன் கதாநாயகர்களாக மருத்துவர்களே எப்போதும் கருதப்படுகிறார்கள். அதேசமயம், ஒரு நோயாளி நலம் பெறுவதற்கான பலவித சேவைகளை செய்து, உடல் நலத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து, கனித்து, மருத்துவ சேவையில் ஒரு நிறைவை அளிப்பது செவிலியர்(நர்ஸ்) எனப்படும் மருத்துவ சேவையாளர்கள்தான். இந்தத் தொழிலானது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது என்றாலும், இந்தியாவில், பெரும்பாலும் பெண்கள்தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள்.பொறுமையும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் இப்பணிக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகள். எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பரிவு மற்றும் பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவை தேவை. இப்பணியில் பலமணி நேரங்கள் நின்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ற உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து நோயாளிகளையும் பாரபட்சமின்றி கவனிக்கும் மனப்பாங்கு வேண்டும்.

ஒரு நர்ஸ் என்ற முறையில் உங்களின் பணியும், பொறுப்பும் பரந்த நிலையைக் கொண்டவை. மருந்துகளை தவறாமல் நோயாளிகளுக்கு கொடுப்பது, ஒவ்வொரு நோயாளியைப் பற்றிய பதிவுகளை(ரெக்கார்ட்) பராமரிப்பது, நோயாளியின் மேம்பாட்டைக் கண்காணிப்பது, மருத்துவ உபகரணங்களை அமைப்பது மற்றும் இயக்குவது ஆகியவற்றுடன் வழக்கமான பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நோயுற்றவர்களுக்கு அன்பு காட்டி அவர்களுக்கு உங்களால் பணிவிடை செய்யும் திறன் உங்களுக்கு இருக்கிறது என்பதை செவிலியர் உணர வேண்டும்.பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் நீங்கள் கடைப்பிடித்தால் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழலாம் என்றார் அவர்.

விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர் எம்.ஜாஸ்லின் வரவேற்றார்.

விழாவில் செவிலியர் கல்லூரி மாணவிகள், வி.பி.எம்.மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் கணேசன், இயக்குநர் ராதிகா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.