தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

காதல் திருமணம் செய்த நர்சிங் மாணவி தற்கொலை

வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி

Updated On :12 மே 2013, 4:18 pm IST

வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியது. சபரீஷ்- சரண்யா இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து தனிக்குடித்தனம் இருந்தனர். இதுபற்றி சரண்யாவின் பெற்றோருக்கு 6 மாதத்திற்கு பின்பே தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த சபரீஷ் மனைவியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த சரண்யா மண்எண்ணையை குடித்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சரண்யா உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.