அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு! ஒருவர் கைது

சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அரசு பஸ்ஸின் கண்ணாடியை சிதம்பரம் புறவழிச்சாலையில் பிரம்மராயர் கோயில் அருகே இருநபர்கள் கல்வீசி தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒருவரை

News image
Updated On :13 மே 2013, 10:15 am

G.Sundararaj

சிதம்பரத்தில்  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு புறவழிச்சாலையில் அரசு பஸ்ஸின் கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. பஸ் மீது கல்வீசியை வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அரசு பஸ்ஸின் கண்ணாடியை சிதம்பரம் புறவழிச்சாலையில் பிரம்மராயர் கோயில் அருகே இருநபர்கள் கல்வீசி தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் மீது வீசி தாக்கியதால் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ராகவேந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர். தப்பிஓடிய தாண்டவன்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.