மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம்: விடுதலைச் சிறுத்தைகள் நன்றி

சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மணி மண்டபம் அமைக்க குரல் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ துரை.ரவிக்குமார், இன்னாள் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள்

News image
Updated On :19 மே 2013, 10:31 am

G.Sundararaj

சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மணி மண்டபம் அமைக்க குரல் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ துரை.ரவிக்குமார், இன்னாள் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் சாய்மஹால் மண்டபத்தில்  நேற்றூ(சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.குறிஞ்சிவளவன், கங்கை அமரன், ப.இளவழகன், ரா.தமிழ்வளவன், து.வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் சு.திருமாறன், கலியபெருமாள், கோ.நீதிவளவன், மு.வரதராஜன், ரா.ஜவகர், ரவிச்சந்திரன், சுந்தர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வ. செல்வமணி, பாலஅறவாழி, கர்கால்வளவன், எழில்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது, உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் தலித் மக்கள் மீது பொய் பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வரும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவோட்டு குரு, கோ.க.மணி ஆகியோரை கண்டிப்பது, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.