சிதம்பரம் பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவை தடுக்க முடியாததையும், மக்கள் பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் சிதம்பரம் கோட்ட காவல்துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலவீதி அண்ணாசிலை அருகே நாளை(மே 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும். ஆர்ப்பாட்டத்தில் அறிவித்திருந்தது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றுவார் என அறிவித்திருந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.