திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (25).இவர் நாகைமாவட்டம் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரைசாலை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, திருத்துறைப்பூண்டி நகருக்குள் செல்வதற்கு பதிலாக , கன்னியாக்குமரி செல்லும் புறவழிóச்சாலையில் பாதை தெரியாமல் தவறுதலாக சென்றுள்ளார். அப்போது எடையூர் காவல்சரகம் பாண்டிசத்திரம் என்ற இடத்தில் வேகத்தடையிóல் வாகனம் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுóந்ததில் தலையில் பலத்த காயம்அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.