சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நுழைவுத்தேர்விற்கு மாணவர்களுக்கு ஆப்டிக்கல் மார்க்கிங் சிஸ்டம் மூலம் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தாளில் மாணவர்கள் கருப்பு மற்றும் நீலம் கலர் பால் பாயிண்ட் பேனா மூலம் மார்க் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்திலிருந்து புகைப்படம் மற்றும் கையெழுத்தை எடுத்து, புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஹால் டிக்கட் அனுப்பப்படுகிறது.