தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து   ஒருவர் சாவு: 6 பேர் காயம்

திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On :28 மே 2013, 5:44 pm

திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் ஆவடியைச் சேர்ந்த உறவினரின் திருமணத்திற்கு, ஆவடியில் இருந்து ராஜன் (23), அசோக்குமார் (19), சந்திரசேகர் (22), மோகன் (24), சண்முகம் (22) கார்த்திக் ஆகியோர் காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணவாளநகருக்கு வந்தனர்.

 பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்து திங்கள்கிழமை காலை காரில் திரும்பிச் சென்றனர். காரை ஆவடியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் துரைராஜ் (24) ஓட்டிச் சென்றார்.

 கார் மணவாளநகரை அடுத்த அரண்வாயல் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. நாய் மீது ஏற்றாமல் இருக்க காரை திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

 இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் இறந்தார்.

 இந்த விபத்து குறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.