தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தரங்கம்பாடியில் 3 வீடுகள் தீக்கிரை

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றிலும் எரிந்து சாமபலாயின.

Updated On :29 மே 2013, 6:44 am

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றிலும் எரிந்து சாமபலாயின.

தரங்கம்பாடி வெளிப்பாளையம் கடைத்தெருவில் வசித்துவரும் ரவிச்சந்திரன்,மல்லிகா,கௌரி ஆகிய 3 பேரின் குடிசை வீடுகளும் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமாயின.

 ரவிச்சந்திரன் மகளுக்கு புதன்கிழமை காலை நாகப்பட்டினத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்காக அவரது வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து தீப்பிடித்து மற்ற வீடுகளுக்கும் கிடுகிடுவென பரவியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.தகவல் அறிந்து பொறையாறு மற்றும் பிள்ளைப்பெருமாள்நல்லூர் தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

 இத்தீவிபத்தில் திருமண சீர்வரிசைப் பொருள்கள்,நகை,ரொக்கம் மற்றும் மின் சாதனங்கள் உள்ளிட்ட சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

பூம்புகார் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ்,நாகை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சிவப்பிரியா,தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர்சாமி,வருவாய் ஆய்வாளர் சரவணன்,தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினர் அருண்குமார் உள்ளிட்டோர்  சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

 அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கம்,அரிசி,வேட்டி ,புடவை உள்ளிட்ட நிவாரண பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி ஆகியோர்  வழங்கினர்.

சுனாமியால பாதிக்கப்பட்ட சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஒரு பகுதிக்கு மட்டும் இதுவரை சுனாமி வீடுகள் கட்டித்தரப்படவில்லை என்றும் அவ்வாறு வீடுகள் தரப்பட்டிருந்தால் இந்த தீ விபத்தால் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கமாட்டோம் என அப்பகுதி மக்கள் முறையிட்டனர். தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு வீடுகள கட்டித்தர உடனடி ஆவண செய்வதாக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.