அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் விபத்தில் சிக்கி சாவு!

பரங்கிப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்த முகமது (38). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் 2 மாதம் முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு விருத்தாசலம் செல்வதற்காக புவனகிரி பஸ்

News image
Updated On :29 மே 2013, 1:13 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பரங்கிப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்த முகமது (38). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் 2 மாதம் முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு விருத்தாசலம் செல்வதற்காக புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது புவனகிரி அருகே பெருமாத்தூர் எனுமிடத்தில் தனியார் பஸ் மற்றொரு பஸ்ஸை முந்திய போது படிக்கட்டில் பயணம் செய்த முகமது உருண்டு கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.