அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொன்னேரியை தூர்வார வேண்டும்: தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தூர்ந்து போய் உள்ளதால் பொன்னேரி மேல்பகுதியில் உள்ள புதுவிளாகம், ஐயனூர், புதுப்பேட்டை, அக்ராமங்கலம், பண்ணப்பட்டு, கே.ஆடூர், பூங்குடி

News image
Updated On :29 மே 2013, 12:15 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உழவர் முன்னணி செயலாளர் ரா.வேணுகோபாலன் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தூர்ந்து போய் உள்ளதால் பொன்னேரி மேல்பகுதியில் உள்ள புதுவிளாகம், ஐயனூர், புதுப்பேட்டை, அக்ராமங்கலம், பண்ணப்பட்டு, கே.ஆடூர், பூங்குடி உள்ளிட்ட வடிகால் கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவகும், கீழ்பகுதியில் உள்ள துணிசிரமேடு, கண்ணன்குடி, வால்காரமேடு, வீரசோழகன், சி.தண்டேஸ்வரநல்லூர், சி.முட்லூர் உள்ளிட்ட பாசனம் பெறும் கிராமங்கள் நீரின்றி பாதிக்கப்படுவதும் ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.

பொன்னேரியை தூர்வாரும்படி பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த ஆண்டு வீராணம்ஏரி தூர்வாரப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்கள். வீராணம்ஏரி பாசனத்துடன் தொடர்புடைய பொன்னேரியை முழுமையாக தூர் வாரி நீரின் கொள்ளவை அதிகரிக்கும் வகையில் கரைகளை பலப்படுத்தி, வலுப்படுத்தி கொடுக்க வேண்டும். பொன்னேரி தூர் வாரப்படும் போது அப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக மண்ணை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மனுவினை தமிழக உழவர் முன்னணி தலைவர் அ.கோ.சிவராமன், துணைச் செயலாளர் ரா.சரவணன், செயலர் ரா.வேணுகோபாலன், நிர்வாகிகள் என்.ஜெயபாலன், தங்க.கென்னடி, அ.மதிவாணன், மு.சம்பந்தம், சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநில கோட்டை செயற்பொறியாளரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.