அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீராணம்ஏரி முற்றிலும் வறண்டது!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை

News image
Updated On :30 மே 2013, 11:52 am

G.Sundararaj

சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. நீர் குறைந்ததால் கடந்த ஏப்.27-ம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து தற்போது வீராணம்ஏரி வறண்டு காணப்படுகிறது.

வீராணம்ஏரி வறண்டு போனதால் வீராணம்ஏரியினை பொதுமக்கள் நடந்தே சென்று கடந்து ஏரியின் மேற்கு கரையில் உள்ள சித்தமல்லி, அகரபுத்தூர், ப.புத்தூர், கருணாகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர்.  தமிழக முதல்வர் வீராணம்ஏரியை தூர் வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரையில் ஏரி தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை. எனவே ஏரியில் நீரின்றி வறண்டு போய் உள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் ஏரியை தூர் வார வேண்டும் என்றும், ஏரியிலிருந்து விவசாயிகள் வண்டல் மண்ணை தங்களது வயல்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.