புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுரை - நெல்லை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி - மதுரை சாலையில் சிந்துபூந்துரை உள்ளது. அந்த பகுதிக்கு உட்பட்ட நடுத்தெரு, வடக்குத் தெரு, மேற்கு தெரு அண்ணா நகர், செல்வியம்மன் கோயில் தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பறை பழுதடைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2013, 5:01 am

முருகன்

திருநெல்வேலி - மதுரை சாலையில் சிந்துபூந்துரை உள்ளது. அந்த பகுதிக்கு உட்பட்ட நடுத்தெரு, வடக்குத் தெரு, மேற்கு தெரு அண்ணா நகர், செல்வியம்மன் கோயில் தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பறை பழுதடைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கட்டித்தரப்படவில்லை. இதனால் 6 ஆண்டுகளாக அருகில் உள்ள வறண்ட குளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது அந்த குளமும் நிரம்பி விட்டதால் தங்களுக்கு கழிவறை வேண்டும் என்று கேட்டும் இதுவரை செய்து தரப்படவில்லை. குடிநீர் வசதியையும் செய்து தரப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் சாமுவேல் செல்வராஜ் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார். கழிவறை கட்ட டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது கட்டித் தரப்படும் என்றும், குடிநீர் வசதி செய்யப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.