அரசு பள்ளியில் மதிய உணவில் முறைகேடு நடப்பதாக புகார்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டை, உணவின் அளவை குறைத்து தருவதாக கூறி அப்பகுதி மக்கள்


கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டை, உணவின் அளவை குறைத்து தருவதாக கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் பள்ளியின் சத்துணவு கூடத்தை முற்றுகை இட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டை மற்றும் உணவின் அளவை குறைத்து தருவதாக கூறி ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசிடம் பள்ளியில் தினமும் 380 மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கு பதிலாக 250 பேருக்கு மட்டும் முட்டை வழங்கப்படுவதாகவும், 38 கிலோ அரிசி போட்டு உணவு தயாரிப்பதற்கு பதில் 15 கிலோ அரிசி போட்டே உணவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் புகார் அளித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஜோதி உதவியாளர்கள் வனிதா, ஜெயமாலா ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில் 70 மாணவர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறையாகவும், 90 மாணவர்களுக்கு முட்டை குறைவாகவும், 15 மாணவர்களுக்கு வெறும் சாதம் மட்டும் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...