தேமுதிக எம்.எ.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சி
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க கட்சியை சேர்ந்தவரான கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சி.எச்.சேகரின் வீடு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே ஜெய்ஹிந்த் நகரில் உள்ளது. இவரது குழந்தைகளின் படிப்பிற்காக மனைவியுடன் கோயம்பேட்டில் வசித்து வந்தாலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாயார் கிருஷ்ணவேணி வசித்து வருவதால் வார விடுமுறை நாட்களிலும் மற்ற நாட்களிலும் இந்த வீட்டில் தங்குவதுண்டு.
எம்.எல்.ஏ-வின் வீட்டின் கீழ் தளத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்படுகிறது.முதல் தளத்தில் உள்ள சி.எச்.சேகர் எம்.எல்.ஏ.வின் தாய் கிருஷ்ணவேணி வசித்து வருகிறார். 2–வது மாடியில் அமித் குமார் நாயக் என்பவரின் குடும்பத்தினர் தங்கி வருகிறார்கள்.புதன்கிழமை எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் கிருஷ்ண வேணி கோயம்பேட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் முதல் மாடியில் பூட்டிக் கிடந்த வீட்டின் முன் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர். பின்னர் அவர்கள் கடப்பாறையால் வீட்டின் மரக்கதவை உடைத்தனர். அப்போது சத்தம் கேட்டு இரண்டாம் தளத்தில் குடியிருந்தவர்கள் மின்விளக்கை போட்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ சி.எச்.சேகர் கும்மிடிப்பூண்டி விரைந்து தனது வீட்டை பார்த்து அவரது வீட்டின் 2வது தளத்தில் குடியிருந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தார். சம்பவம் அறிந்து தே.மு.தி.க-வினர் திரளாக எம்.எல்.ஏ-வின் வீட்டை சூழ்ந்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ சி.எச்.சேகர் கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது கவலை அளிப்பதாகவும், காவல் துறையினர் விரைந்து இது போன்ற குற்றச் சம்பவங்களை நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏற்கெனவே 2005ஆம் ஆண்டு ஜனவரி-9ஆம் தேதி கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சுதர்சனம் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தபோது கொள்ளையர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...