புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

9 மாதங்களாக முடங்கிப் போன நெல்லை மாநகராட்சி வெப்சைட்

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் திருநெல்வேலியைத் தவிர இதர

News image
Updated On :7 நவம்பர் 2013, 10:33 am

முருகன்

திருநெல்வேலி மாநகராட்சியின் வெப்சைட் 9 மாதங்களுக்கு மேலாக முடங்கிப் போனதால் மாநகராட்சி சேவையை ஆன்-லைன் முறையில் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் திருநெல்வேலியைத் தவிர இதர 9 மாநகராட்சிகளுக்கும் தனித்தனியே வெப்சைட் உள்ளது. இதன் சேவையும் சிறப்பாக உள்ளது. இந்த வலைதளங்களில் அந்தந்த மாநாகராட்சியின் வரலாறு, சிறப்புகள், பிரதான இடங்கள், இதுவரை இருந்த மேயர்கள், ஆணையர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், பொதுமக்களும் ஆன்-லைன் மூலம் புகார் மனுக்களை அளிக்கலாம்.

மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் பெறும் வகையில் இந்த வலைதளங்கள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிக்கும் இத்தகைய வலைதளம் இருந்தது. ஆனால், இப்போது இது முடங்கிப் போயுள்ளது. இதை பராமரிப்பதற்கான ஆள்களும் இல்லை. இதன்காரணமாக திருநெல்வேலி மாநகாராட்சிக்குள்பட்ட மக்கள் மாநகராட்சியின் வலைதளத்திலிருந்து எந்தவித சேவையையும் பெற முடியாத நிலையுள்ளது. ஆன்-லைன் முறையிலான குறைதீர் பிரிவும் முடங்கியுள்ளது. பிறப்பு, இறப்பு தொடர்பான சேவைக்கான பணி மட்டுமே ஆன்-லைனில் உள்ளது,மாநகராட்சியின் அன்றாடப் பணிகள், திட்டங்கள், மேயர், ஆணையர் உள்ளிட்டோரின் விழாக்கள், பேச்சு, பங்கேற்கும் நிகழ்வுகள் தினமும் வலைதளத்தில இடம்பெறும். ஆனால், வலைதளம் முடங்கியுள்ளதால் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் இந்த பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது.

இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் த. மோகன் கூறியதாவது:

மாநகராட்சிக்கு தனியாக வலைதளம் இருந்தது. அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 9 மாதங்களுக்கு முன்னர் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் வலைதளத்தை புதுப்பித்து தொடர போதிய ஆள்கள் இல்லை. மேலும், தமிழக அரசு சென்னையைத் தவிர அனைத்து மாநகராட்சிகளுக்கும் நவீன வசதிகள், சிறப்புகளுடன் கூடிய வலைதளத்தை ஏற்படுத்தித் தருவதாகக் கூறியுள்ளது. விரைவில் இந்த வசதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார் என்றார் அவர்.

சென்னையைத் தவிர 9 மாநகராட்சிகளுக்கும் புதிய வலைதளம் ஏற்படுத்தப்பட்டாலும் திருநெல்வேலியைத் தவிர இதர அனைத்து மாநகராட்சிகளும் தங்களது வலைதளம் முடங்காமல் பாதுகாத்து தொடர்ந்து மக்களுக்கு சேவை அளித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களால் வளர்ந்து வரும் சூழலில் திருநெல்வேலி மாநகர மக்களுக்கு மட்டும் 9 மாதங்களுக்கு மேலாக இந்த வலைதள சேவை கிடைக்காமல் இருப்பது பரிதாபத்துக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.