மாநெல்லூரில் திருமண வீட்டில் பணம் நகை கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் பகுதியில் மகனின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிச் சென்ற சந்திரையா(60) என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் 8 சவரன் நகை மற்றும் 1லட்சம் ரூபாயை கொள்ளை


கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் பகுதியில் மகனின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிச் சென்ற சந்திரையா(60) என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் 8 சவரன் நகை மற்றும் 1லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடசாமி மகன் சாந்தையா. தறி நெய்பவரான சாந்தையாவின் மகன் கணபதியின் திருமணம் மாதர்பாக்கம் அருகே ஆந்திர பகுதியான சத்தியவேட்டில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற இருந்ததை ஒட்டி சாந்தையா குடும்பத்துடன் வீட்டை பூட்டி வியாழக்கிழமை மாலை திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார்.தொடர்ந்து வியாழக்கிழமை இரவு திருமண வரவேற்பும், வெள்ளிக்கிழமை காலை திருமணமும் முடிந்த நிலையில் திருமண கோஷ்டியினர் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளனர்.
சாந்தையா வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதையும், பீரோ கதவு திறந்திருப்பதையும் பார்த்து அதிர்ந்தார். தொடர்ந்து பீரோவை சோதித்ததில் பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க கதவை திறந்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சாந்தையா அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...