2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மாநில குத்துச் சண்டைப் போட்டி: கலசலிங்கம் பல்கலை.க்கு 8 தங்கம்

திருச்சி, புனித பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 13-வது மாநில குத்துச் சண்டைப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

News image
Updated On :17 நவம்பர் 2013, 7:27 am

கே.ஜெயக்குமார்

திருச்சி, புனித பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 13-வது மாநில குத்துச் சண்டைப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இப் போட்டியில் பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவு 2-ம் ஆண்டு மாணவர் 16 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பி.ஸ்ரீதர், பி.நாகராஜ், எஸ்.சிவராஜ், ஏ.அருண்குமார், எம்.நாகராஜ், எஸ்.மகாசுரேஷ், எம்.சுஜிதா, எஸ்.ஜோயல்பால் தாமஸ் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

எம்.அப்துல் ஃபத்தாஹ், எம்.விக்னேஷ், எஸ்.மகாசுரேஷ், நவீன் பாண்டியன், எஸ்.கிருஷ்ணகுமார் ராஜூ ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

ஜெ.ஆன்ட்ரூ டெஃப்ர்சன், வி.ரஞ்சித் கண்ணன், பி.கமலேஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

ஒட்டு மொத்த தொடரில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் முதல் இடம் பெற்று கேடயத்தைப் பெற்றது.

பதக்கம் வென்ற மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.