பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடும்ப அட்டையுடன் ஆட்சியர் அலுலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மானூர் ஒன்றியம், பல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் இயங்கும் பகுதி நேர

News image
Updated On :19 நவம்பர் 2013, 9:56 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

மானூர் ஒன்றியம், பல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் இயங்கும் பகுதி நேர ரேசன்கடை உள்ளது. இந்த கடையில் 474 குடும்ப அட்டைகளுக்கு நவம்பர் மாதம் விநியோகம் செய்ய 6900 கிலோ புழுங்கல் அரிசி, 750 கிலோ சர்க்கரை, 250 கிலோ கோதுமை, 771 லிட்டர் மண்ணெண்ணை, பாமாயில் 420 பாக்கெட், உளுந்தம்பருப்பு 100 கிலோ, துவரம் பருப்பு 250 கிலோ உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணை போன்றவை குடும்ப அட்டைகளுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் சுழற்சி முறையில் பயனாளிகளுக்கு மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படுகிறதாம். எனினும் மண்ணெண்ணை 2 மாதத்திற்கு ஒரு முறை கூட கிடைப்பதில்லையாம். துவரம் பருப்பு, பாமாயில் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை ரேசன் கடைக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்தும் அப்பகுதி மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பள்ளமடை கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களுக்கு அனைத்து பொருட்களும் முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.