பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நூலக வரி ரூ. 4 கோடி வசூல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வர வேண்டிய நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ரூ. 1 கோடி நிலுவை இருப்பதாக மாவட்ட நூலகர் க. மந்திரம் தெரிவித்தார்.

News image
Updated On :23 நவம்பர் 2013, 10:15 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வர வேண்டிய நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ரூ. 1 கோடி நிலுவை இருப்பதாக மாவட்ட நூலகர் க. மந்திரம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.
முதல் நிலை நூலகம் திருநெல்வேலி நகரில் இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் இது தவிர 99 கிளை நூலகங்களும், 86 ஊர்புற நூலகங்களும், 2 பகுதி நேர நூலகங்களும், ஒரு நடமாடும் நூலகம் உள்பட 190 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட மைய நூலகத்தில் 43,683 உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், போன்ற போட்டித் தேர்வுகளுக்கான 45,000 புத்தகங்கள் உள்பட இங்கு 1.50 லட்சம் புத்தகங்கள் உள்ளன. 220 புரவலர்கள் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்கள் சந்தா, புரவலர்கள் நிதியாக ரூ. 1.5 கோடி முதலீட்டில் உள்ளது. முதலீட்டில் இருந்து கிடைக்கும் வட்டியில் புத்தகங்கள், நூலகக் கட்டடங்களின் வாடகை போன்றவை செலுத்தப்படுகிறது.

மாவட்ட நூலகர் க. மந்திரம் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து வரியில் 10 சதவிகிதம் நூலக வரியாக, நூலக ஆணைக் குழு கணக்கில் செலுத்தப்படும். நூலக வரியில் இருந்து நூலகர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 7 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 475 கிராம ஊராட்சிகளில் வசூலிக்கப்பட்ட நூலக வரி ரூ. 5 கோடி நூலகக் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையாக இருந்தது.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையினால் இம்மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையாக உள்ள ரூ. 1 கோடி விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.