நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை: கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

ஊராட்சித் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், பேராசிரியர் ஆர்.துரைராஜன்

News image
Updated On :23 நவம்பர் 2013, 11:19 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சியில் கோமாரி நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், பேராசிரியர் ஆர்.துரைராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோமாரி நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

கால்நடைத்துறை சார்பில் நடத்தப்படும் முகாம்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய்த் தடுப்பூசிகளைப் போட வேண்டும். கோமாரி நோய் பாதித்த மாடுகளை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு பேராசிரியர்கள் வலியுறித்தி விவரித்தனர்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள், கால்நடைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.