பைக் மீது பஸ் மோதி ஒருவர் சாவு
வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிகண்டன்(25). இவரது தந்தை மாணிக்கம் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி காரியம்


வந்தவாசி அருகே பைக் மீது தனியார் பஸ் மோதியதில் கட்டட மேஸ்திரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிகண்டன்(25). இவரது தந்தை மாணிக்கம் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி காரியம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தன. இதற்கான பொருள்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை மணிகண்டன் பைக்கில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். கீழ்சீசமங்கலம் கூட்டுச்சாலையில் சென்றபோது வந்தவாசியிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...