கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது
புளியங்குடி டி.என். புதுக்குடியை சேர்ந்த இளையபாண்டி என்ற முகம்மதுஇக்பால் (62). கூலித் தொழிலாளியான இவர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளாராம். இக்பால் தனது 5 வது மனைவி


திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவியை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
புளியங்குடி டி.என். புதுக்குடியை சேர்ந்த இளையபாண்டி என்ற முகம்மதுஇக்பால் (62). கூலித் தொழிலாளியான இவர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளாராம். இக்பால் தனது 5 வது மனைவி செய்யதுஅலிபாத்திமாவை (40) திருநெல்வேலி நகரம் தொட்டிப் பாலம் தெருவில் வாடகைக்கு குடிஅமர்த்தி உள்ளார்.
வியாழக்கிழமை செய்யதுஅலிபாத்திமா வீட்டுக்கு வந்த முகம்மதுஇக்பால் வந்தாராம். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதற்கிடையே வெள்ளிக்கிழமை உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இருவரும் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரத்தில் செய்யதுஅலிபாத்திமா, கணவர் முகம்மதுஇக்பாலை கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமைடந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து மனைவியை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...