திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

போலி நகை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் நகைக் கடையில் போலி நகைகளைக் கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:01 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் நகைக் கடையில் போலி நகைகளைக் கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை ஆசாரி மகன் திருப்பதி. இவர் வத்திராயிருப்பில் அமிர்தா ஜூவல்லரி என்ற நகைக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு 4.1.20012-ம் தேதி வந்த அடையாளம் தெரியாத நபர், கொத்தாக பழைய நகைகளைக் கொண்டுவந்து கொடுத்து, விற்க வேண்டும் என்றுள்ளார். இதனை பரிசோதித்த திருப்பதி, தங்கம் என்று தெரிந்ததால், ரூ.7 லட்சத்திற்கு நகை போகும் என்றுள்ளார்.

இதனையடுத்து வந்த நபருக்கு, திருப்பதி ரூ.5 லட்சத்திற்கு வெள்ளியும் மேலும் ரூ.2 லட்சமும் கொடுத்துள்ளார். வந்த நபர் வெளியே சென்ற பின்பு சில நகைகளை திருப்பதி பரிசோதித்துப் பார்த்தாராம். அது போலி என தெரியவந்துள்ளது. அக்கம் பக்கம் போய் வந்த நபரைத் தேடி பார்த்தபோது அவரைக் காணவில்லையாம். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் திருப்பதி மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.