அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை

News image
Updated On :1 அக்டோபர் 2013, 3:30 pm IST

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீதிவள்ளல் தலைமையில் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ராஜேந்திரன் சிலை அருகே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறியில் புலத்தில் முதல்வர் படத்தை பொருத்தி, வெடி, வெடித்து ஊழியர் சங்கத்தினர் கொண்டாட்டம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு முழுக்கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொறியியல் புலத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை பொருத்தி, வெடி, வெடித்து கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.