மாடு பக்கத்து வீட்டில் சாணமிட்டதால் தகராறு: ஒருவர் பலி
திருநெல்வேலி அடுத்து மானூர் அருகேயுள்ள கலக்குடியை சேர்ந்த மாயாண்டி 50. இவருடைய மாடு தினமும் பக்கத்து வீட்டில் சாணம் போட்டு வந்துள்ளது.


திருநெல்வேலி அடுத்து மானூர் அருகேயுள்ள கலக்குடியை சேர்ந்த மாயாண்டி 50. இவருடைய மாடு தினமும் பக்கத்து வீட்டில் சாணம் போட்டு வந்துள்ளது.
ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டார் செல்லய்யா 60, அவருடைய மகன் முருகன் 35 ஆகிய இரண்டு பேரும் மாயாண்டியை இரண்டு வாரத்துக்கு முன் உருட்டுக்கட்டையினால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த மாயாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி நேற்றிரவு உயிரிழந்தார். மாயாண்டி குடும்பத்தார் அவரது சடலத்தை வாங்க மறுத்து, மருத்துவனையை முற்றுக்கையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் உடனே கைது செய்யக் கோரினர். போலீசார் அவர்களை சமாதானப்படுவதில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...