மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ரூ.10லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பாக்குகள், ஹேன்ஸ் உள்ளிட்ட பொருள்கள் அதிகளவு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்

News image
Updated On :3 அக்டோபர் 2013, 9:27 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹேன்ஸ் உள்ளிட்ட பொருகள்களை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பாக்குகள், ஹேன்ஸ் உள்ளிட்ட பொருள்கள் அதிகளவு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஹெச்.பி.ராஜா, வட்டார பாதுகாப்பு அதிகாரிகள் பத்மநாபன் (சிதம்பரம்), ஏழுமலை (பரங்கிப்பேட்டை), அருண்மொழி (கீரப்பாளையம்), குணசேகரன் (புவனகிரி) ஆகியோர் மேலவீதி மார்க்கெட் பின்புறமுள்ள கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் உள்ள மொத்த விற்பனையகத்தில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மொத்த விற்பனைக்காக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஸேன்ஸ் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.