மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்தம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்பு உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, வெளியில் உள்ள காற்றை குளுமையாக

News image
Updated On :4 அக்டோபர் 2013, 2:15 pm

ஜி.சுந்தரராஜன்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, தூய காற்றை உள்ளே அனுப்பும் கருவி பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்பு உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, வெளியில் உள்ள காற்றை குளுமையாக உள்ளே அனுப்பும் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.  சித்சபையில் தீபாராதனை காட்டும் போது ஏற்படும் புகை நீண்ட நேரம் உள்ளேயே இருப்பதால் ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் முகம் பக்தர்களுக்கு தெரியவில்லை. மேலும் பூஜைக்காலங்களில் உள்ளே கடும் வெப்பமாக இருப்பதால் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பொதுதீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.

பல லட்சங்கள் மதிப்புள்ள இந்த கருவியை மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த கருவியை இலவசமாக பொருத்தி தருகிறார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கருவி பொருத்தப்படுவதால் கோயிலில் உள்ள கனகசபை மற்றும் சித்சபையின் புராதானம் கெட்டுபோய்விடும் என ஒரு சில தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.