புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்கள் இருவர் கைது: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நாடோடிகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் நேற்று சாட்டையால் அடித்துக் கொண்டு வித்தை காட்டும் நாடோடிக் குழுவைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்ததாகக் கூறி கைது செய்தனர். மீனாட்சி, மாரியம்மாள் என்ற அந்த இருவரையும் உடனே விடுதலை

News image
Updated On :4 அக்டோபர் 2013, 5:41 am

முருகன்

திருநெல்வேலியில் நேற்று சாட்டையால் அடித்துக் கொண்டு வித்தை காட்டும் நாடோடிக் குழுவைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்ததாகக் கூறி கைது செய்தனர். மீனாட்சி, மாரியம்மாள் என்ற அந்த இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் நாடோடிக் குழுவினர் குவிந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால், மொட்டை அடித்து, கையில் பிளேடால் கீறிக்கொண்டு, அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தடுத்துநிறுத்திய போலீஸார், அவர்களில் எவரேனும் இருவர் உள்ளே சென்று மனு கொடுத்து வரலாம் என்று பின்னர் கூறினர். இதனால் ஆட்சியர் வளாகம் பரபரப்படைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.