சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்தம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்பு உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, வெளியில் உள்ள காற்றை குளுமையாக


பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, தூய காற்றை உள்ளே அனுப்பும் கருவி பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்பு உள்ள கனகசபையில் காற்றை வெளியேற்றி, வெளியில் உள்ள காற்றை குளுமையாக உள்ளே அனுப்பும் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சித்சபையில் தீபாராதனை காட்டும் போது ஏற்படும் புகை நீண்ட நேரம் உள்ளேயே இருப்பதால் ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் முகம் பக்தர்களுக்கு தெரியவில்லை. மேலும் பூஜைக்காலங்களில் உள்ளே கடும் வெப்பமாக இருப்பதால் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பொதுதீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.
பல லட்சங்கள் மதிப்புள்ள இந்த கருவியை மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த கருவியை இலவசமாக பொருத்தி தருகிறார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கருவி பொருத்தப்படுவதால் கோயிலில் உள்ள கனகசபை மற்றும் சித்சபையின் புராதானம் கெட்டுபோய்விடும் என ஒரு சில தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...