மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரமாண்டமான கொலு!

ஸ்ரீநடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி தொடங்கிய இந்த

News image
Updated On :5 அக்டோபர் 2013, 3:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்க தினமான சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஸ்ரீநடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.13-ம் தேதி நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

கொலுவில் ஸ்ரீநடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்டிதர் தெரிவித்தது: ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.