சிதம்பரம் அருகே முதலை கடித்து விவசாயி காயம்!
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (60). விவசாயியான இவர் சனிக்கிழமை காலை கிராமத்தில் உள்ள குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது


சிதம்பரம் அருகே கிராம குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது முதலை கடித்து விவசாயி ஒருவர் காயமுற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (60). விவசாயியான இவர் சனிக்கிழமை காலை கிராமத்தில் உள்ள குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது குளத்திலிருந்து முதலை ஒன்று அவரது வலது கையை கடித்து கவ்வியது. சந்திரசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அருகாமையிலிருந்தவர்கள் முதலை வாயிலிருந்து கையை வெளியே எடுத்து உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் வலது கையில் பலத்த காயமுற்ற அவர் மேல் சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...