எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வந்தவாசியில் மாயமான பள்ளி மாணவர்கள் சென்னையில் மீட்பு

வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கார்த்தி(12), சந்தோஷ்(12), சந்துரு(12). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை வீடு

News image
Updated On :5 அக்டோபர் 2013, 12:45 pm

கணேஷ்கிரி

வந்தவாசியில் மாயமான பள்ளி மாணவர்கள் 3 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸாரால் மீட்கப்பட்டனர்.

வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கார்த்தி(12), சந்தோஷ்(12), சந்துரு(12). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இவர்களது பெற்றோர் புகாரின்பேரில் சக மாணவரான விக்னேஷிடம்(12) வந்தவாசி தெற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதில் கார்த்தி தனது உறவினர்கள் மும்பையில் இருப்பதாகவும், அங்கு ஜாலியாக செல்லலாம் என்றும் சந்தோஷ், சந்துரு ஆகியோரிடம் கூறியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வந்தவாசி தெற்கு போலீஸôர் 3 பேரையும் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் மாணவர் சந்தோஷ் வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் மாலதியிடம்  போனில் தொடர்பு கொண்டு தான் மும்பை செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாக கூறினாராம். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு மாலதி தகவல் அளித்தார். இதன்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் 3 மாணவர்களையும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீட்டு வந்தவாசிக்கு அழைத்து வந்தனர். பின்னர் சனிக்கிழமை காலை 3 பேரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.