ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கீழணையிலிருந்து பாசனத்திற்கு கூடுதலாக நீர் திறந்து விட கோரி விவசாயிகள் சாலைமறியல்

கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :6 அக்டோபர் 2013, 1:07 pm

ஜி.சுந்தரராஜன்

கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழணையிலிருந்து போதிய அளவு நீர் திறந்துவிடப்பட்டததால், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் டீசல் என்ஜின் மூலம் நீண்ட தூரத்திலிருந்து நீரை வயலுக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கீழணையிலிருந்து வடவாறு பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே பெரியபுங்கனேரி, சிறியபுங்கனேரி ஆகிய கிராம விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்வகுளம் எனுமிடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.