ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காப்பீடு தொகையை வழங்க கோரி வங்கி முன்பு எம்எல்ஏ தலைமையில் முற்றுகை போராட்டம்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரி சிதம்பரம் தெற்குவீதி கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள்

News image
Updated On :7 அக்டோபர் 2013, 12:07 pm

ஜி.சுந்தரராஜன்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரி சிதம்பரம் தெற்குவீதி கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகை போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

முற்றுகை: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை உடனே வழங்க வேண்டும், இந்த ஆண்டு பிரிமியம் தொகையை அரசே கட்ட வேண்டும், கல்லணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடியை பெற்று காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பாசனத்திற்கு நீரை வழங்க வேண்டும், வீராணம்ஏரியிலிருந்து கான்சாகிப் வாய்க்கால், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு பாசனத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை: முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் கோ.மாதவன், பி.கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோருடன் கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகரன், வட்டாட்சியர் எம்.விஜயா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆர்.செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, வீராணம்ஏரி உதவிப் பொறியாளர் உமா, காவல்துறை ஆய்வாளர் பி.முருகானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தீர்வு: பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு முழுமையாக நீர் திறந்துவிடப்படும் என்றும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு தற்போது நீர் திறந்துவிட முடியாது. கல்லணையிலிருந்து கூடுதலாக நீ்ர் திறந்துவிடுமாறு கோரியுள்ளோம். 3 தினங்களில் கூடுதலாக நீர் தருவதாக தெரிவித்துள்ளனர். நீர் கூடுதலாக வரும் போது திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்றும் 3 தினங்களில் சேத்தியாத்தோப்பு அணைக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பாடவிடில் விவசாயிகளை திரட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.