15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆடு மேயக்க சென்றவர் கொலை : 2 பேர் கைது

வேப்பங்குப்பம் அருகே ஆடு மேய்க்க காட்டிற்கு சென்றவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் இருவரை வேப்பங்குப்பம்

Updated On :10 அக்டோபர் 2013, 1:12 pm

வேப்பங்குப்பம் அருகே ஆடு மேய்க்க காட்டிற்கு சென்றவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

நேமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (40).  இவர் கடந்த திங்கள்கிழமை ஆடு மேய்க்க காட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.  நேமந்தபுரம் காட்டில் காளி கோயில் அருகில் இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. வேப்பங்குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (45), இவரது மகன் சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது.  திருப்பதியின் மனைவிக்கும், வெங்கடேசனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாம்.  அதனால் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  திருப்பதி மற்றும் சூரியபிரகாஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.